127. அருள்மிகு பிரணவேஸ்வரர் கோயில்
இறைவன் பிரணவேஸ்வரர், சிவானந்தேஸ்வரர்
இறைவி மங்களாம்பிகை, மலையரசி
தீர்த்தம் மங்கள தீர்த்தம்
தல விருட்சம் வன்னி மரம்
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருப்பேணுபெருந்துறை, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'திருப்பந்துறை' என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணம் - நாச்சியார் கோயில் சாலையில், நாச்சியார் கோயிலுக்கு முன் வலதுபுறம் திரும்பும் பூந்தோட்டம் சாலையில் சுமார் 2.5 கி.மீ. தொலைவு சென்றால் இக்கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ. தொலைவு.
தலச்சிறப்பு

Penuperunthurai Gopuramபிரம்மாவுக்கு பிரணவத்தின் பொருள் தெரியாததால் அவரை சிறையில் அடைத்த தோஷம் நீங்குவதற்கு முருகப்பெருமான் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.

மூலவர் 'பிரணவேஸ்வரர்' உயர்ந்த பாணத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன் லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். 'சிவானந்தேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. மூலவரின் சன்னதி முன்பு முருகப்பெருமான் சின்முத்திரையுடன், கண்களை மூடிக் கொண்டு தியான நிலையில் இருக்கின்றார். அம்பாள் 'மங்களாம்பிகை' என்றும் 'மலையரசி' என்றும் வணங்கப்படுகின்றாள்.

Penuperunthurai Muruganகோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் குக விநாயகர், சாட்சி விநாயகர், பாலசுப்ரமண்யர், சமயக்குரவர்கள் நால்வர், மகாலட்சுமி, நவக்கிரகங்கள் பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். நவக்கிரகத்தில் உள்ள சூரியன் தனது மனைவிமார்களுடன் காட்சி தருகின்றார்.

அம்பிகை, முருகப் பெருமான், பிரம்மா ஆகியோர் வழிபட்ட தலம்.

திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com